14 வருஷத்துக்கு முன்னாடியே ஸ்டாலின் திட்டத்தை கணித்த அஜித்.. என்ன இப்படி இறங்கிட்டாங்க.!

தற்போது அன்றே கணித்தார் அஜித் என்ற ஹேஷ்டேக் இணையத்தில் டிரண்டாகி வருகிறது. முன்னதாக ஏற்கனவே அன்றே கணித்த சூர்யா என்ற மீம்கள் சமூகவலைதளத்தில் டிரண்டானது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம் நடிகர் சூர்யா நடித்த படங்களும் சமீபகாலமாக உலகில் நடந்த நிகழ்வுகளும் ஒத்துப்போனதே ஆகும்.

உதாரணமாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தில் சீனர்கள் இந்தியாவில் ஒருவித வைரஸ் நோய் பரப்புவது போன்று காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதேபோல் கடந்த ஆண்டு ஒரு கொரோனா நோய் தொற்று உருவானது.

இதுமட்டுமின்றி காப்பான் படத்தில் விவசாய நிலங்களை வெட்டுக்கிளிகள் தாக்குவது போல் காட்சிப்படுத்தி இருப்பார்கள். இது போன்ற சம்பவமும் கடந்த ஆண்டு நிகழ்ந்தது. எனவே சூர்யா எதிர்காலத்தில் நடக்கும் சம்பவங்களை தனது படங்கள் மூலமாக தெரியப்படுத்தி இருக்கிறார் என்பது போன்று நெட்டிசன்கள் அன்றே கணித்தார் சூர்யா என்ற ஹேஷ்டேக்குகளை டிரண்டாக்கினார்கள்.

தற்போது இதேபோல் நடிகர் அஜித்தும் அன்றே கணித்துள்ளார். அதாவது அஜித் நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான பில்லா படத்தில் சேவல் கொடி பறக்குதடா என்ற பாடல் இடம் பெற்றிருக்கும். இப்பாடலில் தமிழன் பேசும் தமிழ்க்குல விளக்கு வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு? என்கிற வரிகள் இடம் பெற்றிருக்கும். இந்த வரிகள்தான் தற்போது அன்றே கணித்த அஜித் என்கிற ஹேஷ்டேக் வைரலாவதற்கு காரணம்.

அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அன்னை தமிழில் அர்ச்சனை என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தை அஜித் ஏற்கனவே அவரது படத்தில் இடம்பெற்ற பாடல் மூலம் கணித்துள்ளார் என கூறி அவரது ரசிகர்கள் தற்போது இந்த பாடலை ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.

Contact Us