தனுஷுடன் இரவு பார்ட்டிக்கு சென்ற மச்சினிச்சி? அடுத்த நாளே விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய கணவர்

என்னதான் தனுஷ் ஒரு நடிகராக இந்திய சினிமாவை தாண்டி உலக சினிமா வரை கொண்டாடப்பட்டாலும் கோலிவுட் வட்டாரங்களில் இன்னமும் நடிகைகள் விஷயத்தில் பல்வேறு கிசுகிசுக்களில் மாட்டிக் கொண்டு தான் இருக்கிறார். இன்று தமிழ் சினிமாவில் இளம் நடிகைகள் பலரும் திருமணத்திற்கு பிறகு வெகு விரைவில் விவாகரத்து வாங்கியதற்கு முக்கிய காரணமே தனுஷ் தான் என பேனர் அடிக்காத குறைதான்.

அதிலும் விஜய் டிவி பிரபலமான திவ்யதர்ஷினி, அமலா பால் போன்ற பலரது வாழ்க்கையில் சின்னாபின்னமானதற்கு காரணம் தனுஷ் தான் என வாரம் ஒரு முறையாவது ஏதோ ஒரு பத்திரிகையில் செய்தி வெளியாகி விடுகிறது. இப்படி இருக்கையில் தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவின் தங்கை சௌந்தர்யாவுக்கு முதல் திருமணம் விவாகரத்து நடைபெற முழுக்க முழுக்க தனுஷின் இரவு பார்ட்டி தான் காரணம் என ஒரு செய்தி வெளியாகி கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா நட்சத்திரங்கள் என்றால் இரவு பார்ட்டி கொண்டாடுவது வழக்கம் தான். அந்த பார்ட்டியில் யார் இருக்கிறார்களோ இல்லையோ தனுஷ் கண்டிப்பாக இருப்பார். அவருடன் குறிப்பிட்ட சில நடிகைகள் வழக்கமாக கலந்து கொள்வார்கள். அதேபோல் அன்று தனுஷுடன் அவரது மச்சினிச்சி சௌந்தர்யாவும் உடன் வந்திருந்தாராம்.

அந்த நேரத்தில்தான் சௌந்தர்யாவின் முன்னாள் கணவர் அஸ்வின் என்பவருடைய நண்பர் அந்த பார்டிக்கு வந்து சௌந்தர்யாவின் நடவடிக்கைகளை கவனித்துள்ளார். அப்போது பார்ட்டியில் தனுசுடன் சௌந்தர்யா இரவு தங்கியதையும் கணவனிடம் போட்டுக் கொடுத்து விட்டாராம் அந்த நண்பர்.

அன்று இரவு பார்ட்டி முடித்து விட்டு மனைவி வந்து விடுவார் என காத்துக் கொண்டிருந்த அஸ்வினுக்கு ஏமாற்றம் அடைந்ததை விட அந்த நண்பர் சொன்ன விஷயம் கோபத்தை ஏற்படுத்த உடனடியாக விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி வாழ்க்கையை முடித்துக் கொண்டார் என்கிறார்கள். இது கோலிவுட் வட்டாரங்களில் உலா வரும் தகவலே தவிர உண்மையா என்பது அவர்களுக்குத்தான் தெரியும்.

Contact Us