பாகம் பிரிப்பதில் தகராறு – மர சட்டத்தால் அண்ணனை அடித்துக்கொன்ற தம்பி

 

பாகம் பிரிப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மர சட்டத்தால் பின் தலையிலும் நெஞ்சிலும் அடித்து அண்ணனை கொலை செய்திருக்கிறார் தம்பி. இந்த கொடூர சம்பவம் மயிலாடுதுறை மாவட்டம் பொரையாறு அடுத்த காலமாநல்லூரில் நடந்திருக்கிறது.

காலமாநல்லூரைச் சேர்ந்த சகோதரர்கள் சின்னராசு -விவேக். இவர்கள் குடியிருக்கும் குடிசை வீட்டில் பாகம் பிரிப்பது தொடர்பாக வாக்குவாதம் நடந்திருக்கிறது . இந்த வாக்குவாதம் வலுத்துக் கொண்டே போன நிலையில் ஆத்திரமடைந்த தம்பி விவேக், அங்கே கிடந்த மர சட்டத்தை எடுத்து அண்ணன் சின்ன ராவுவின் பின் தலையில் ஓங்கி அடித்திருக்கிறார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சின்னராசு பின்னர் சுதாரித்துக் கொண்டு எழுந்து நின்று இருக்கிறார். ஆனால் அப்போதும் ஆத்திரம் தீராத விவேக், மர சட்டத்தால் சின்ன ராசுவின் நெஞ்சில் ஓங்கி அடித்து இருக்கிறார். இதில் கீழே விழுந்த சின்னராசு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார்.

தகவலறிந்த பொறையாறு போலீசார் சின்னராசு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தம்பி விவேக்கை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பாகம் பிரிப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அண்ணனை கொலை செய்த தம்பியின் செயல் மயிலாடுதுறை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Contact Us