சிறுமியை கடத்தி திருமணம் – இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

 

சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த இளைஞரை தட்டிக் கேட்ட உறவினர்களுக்கும் மிரட்டல் விடுத்ததால் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஊரில் வாழ்ந்து வந்தவர் முரளி. பெயிண்ட வேலை செய்து வந்த இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 2017ஆம் ஆண்டு கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டுவிட்டார். இந்த சிறுமியுடன் பாலியல் தொடர்பான உறவுகளை வைத்துக் கொண்டிருக்கிறார்.

தகவல் அறிந்த உறவினர்கள் முரளியிடம் சென்று தட்டிக்கேட்க, அவர்களுக்கு கொலைமிரட்ட வைத்திருக்கிறார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர்கள், உறவினர்கள் போலீசில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போக்சோ வழக்கைல் அவரை கைது செய்து அவரிடம் இருந்து சிறுமியை மீட்டனர்.

இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடத்தப்பட்ட சிறுமி முரளிக்கு சிறுமியை கடத்தியதற்காக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், சிறுமியின் உறவினர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் என மொத்தம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்திருக்கிறார்.

Contact Us