மீரா மிதுனின் யூடியூப் கணக்கு முடக்கம்…. சைபர் க்ரைம் போலீசார் கடிதம்…!!!

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மாடல் நடிகை மீரா மிதுன். தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் இவர் சமீபத்தில் பட்டியலினத்தவர்களை இழிவாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இதனை கண்ட பலர் அவர் மீது காவல் துறையில் வழக்கு தொடர்ந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மீரா மிதுன் கைது செய்யப்பட்டார்.

கைதான இவர் பேட்டி ஒன்றில் தன்னை போலீசார் டார்ச்சர் செய்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார். மேலும் மீராமிதுன் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தி உள்ளார் என்றும் அவர் மீது சில வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை மீரா மிதுனின் யூட்யூப் கணக்கை முடக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் யூட்யூப் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இதைத் தவிர மீராமிதுன் பயன்படுத்திய மற்ற சமூக வலைத்தள பக்கங்களும் முடக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Contact Us