என்னை காப்பாற்றுங்கள் என்று சுவர் மேல் ஏறிய சிறுமி- வானத்தை நோக்கி சுட்ட அமெரிக்க படைகள்- கொடுமை…

காபூலில் உள்ள விமான நிலையத்தை, 5 வது நாளாக அமெரிக்க படைகள் தம் கை வசம் வைத்திருக்கிறார்கள். ஆனால் விமான நிலையம் நோக்கிச் செல்லும் பாதையை தலிபான்கள் அடைத்துள்ள நிலையில். ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் காபூல் விமான நிலையம் செல்ல முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளார்கள். இதேவேளை விமான நிலைய வழாகத்தினுள் பல நூறு ஆப்கான் மக்கள் தமது பெண் குழந்தைகளோடு நிற்கிறார்கள். அதில் ஒரு சிறுமி சுவரில் ஏறி அடுத்த பக்கம் நிற்க்கும் அமெரிக்க ராணுவத்திடம் தன்னை காப்பாற்றுமாறு கதறிய காட்சிகள் நெஞ்சை உலுக்குகிறது. ஆனால் அமெரிக்க படைகள் வானத்தை நோக்கிச் சுட்டு அங்கே உள்ள மக்களை கலைக்க முற்பட்டு வருகிறார்கள்.

இன் நிலையில் பிரித்தானிய துருப்புகள் பல சிறுமிகளை, காப்பாற்றி மேலும் ஒரு கார்கோ விமானம் மூலம் அவர்களை ஏற்றி வேறு ஒரு நாட்டுக்கு கொண்டு செல்ல இருக்கிறார்கள். பிரித்தானிய கட்டளை அதிகாரியின் நேரடிக் கட்டளையை நிராகரித்துள்ள சில பிரித்தானிய ராணுவத்தினர். இவர்களை நாங்கள் இங்கே விட்டு விட்டு வந்தால், அவர்களை கொலை செய்வதற்கு சமன் என்று கூறி. மேலதிகாரிகளோடு வாக்குவாதப்பட்டு. சில பெண் பிள்ளைகளை காப்பாற்றி உள்ளார்கள். அதற்காக அவர்கள் பதவிகள் சிலவேளை பறிபோகக் கூடும் என்று BBC தெரிவித்துள்ளது.

Contact Us