அலுவலக பேருந்து மீது துப்பாக்கிச் சூடு…. 7 பேர் பலியாகிய சோகம்…. அதிரடி விசாரணையில் போலீசார்….!!

 

நைஜீரியாவில் உள்ள இமோ மாகாணத்தில் தனியார் துறைக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளிகளை ஏற்றுக்கொண்டு கடந்த 18 ஆம் தேதி அலுவலக பேருந்து ஒன்று சென்றுள்ளது. அப்போது அந்த பேருந்தை துப்பாக்கி ஏந்திய கும்பல் ஒன்று மறித்து தொழிலாளிகள் மீது கொடூரமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் தொழிலாளிகள் 6 பேர் மற்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இந்த தாக்குதலுக்கான காரணம் யார் என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Contact Us