கள்ளக்காதலியின் கணவரை சரமாரியாக குத்தி சாய்த்த திமுக பிரமுகர்

 

கோபிசெட்டிபாளையம் அடுத்த நாமக்கல்பாளையத்தை சேர்ந்தவர் சச்சிதானந்தன். அரியலூர் முன்னாள் திமுக ஊராட்சி மன்றத் தலைவரான இவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் மைதிலி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ள உறவாக மாறியது. இந்த விவகாரம் மைதிலியின் கணவர் சீனிவாசனுக்கு தெரியவந்ததையடுத்து, மனைவி மைதிலியை, இனி சச்சிதானந்தன் உடன் பழக கூடாது என்று கண்டித்திருக்கிறார்.

இதனால் மைதிலியுடன் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்த சச்சிதானந்தன், சீனிவாசனை தீர்த்துக் கட்டினால்தான் மைதிலியுடன் எப்போதும் போல் உல்லாசமாக இருக்கலாம் என முடிவு எடுத்திருக்கிறார். இதை எடுத்து சீனிவாசனை தீர்த்துக் கட்டுவதற்காக நண்பர்களை அழைத்துக்கொண்டு இரவு தனியார் கம்பெனியில் வேலை முடிந்து சீனிவாசன் வீடும் திரும்பும் வழியில் கத்தியுடன் காத்திருந்திருக்கின்றனர்.

அதன்படியே வேலை முடிந்து இரவு வேனை ஓட்டிக் கொண்டு வந்திருக்கிறார் சீனிவாசன். சமத்துவபுரம் பகுதிக்கு வந்தபோது வேனை மறித்ததும் இறங்கிய சீனிவாசனை சச்சிதானந்தனும், அவரது நண்பர்கள் மூன்று பேரும் சேர்ந்து கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடியிருக்கிறார்கள்.

 

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் துடி துடித்துக் கொண்டிருந்த சீனிவாசனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சீனிவாசன் உயிர் பிழைத்தார். இதை எடுத்து சிறுவலூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் நடந்த இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். நான்கு மாதங்களாகி குற்றவாளிகளை கண்டுபிடிக்காத நிலையில், தன் மனைவி மீது சந்தேகம் இருப்பதாக சீனிவாசன் போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசாரும் மைதிலியை பிடித்து துருவித்துருவி விசாரித்ததில் கள்ளக்காதலன் சச்சிதானந்தன் தான் தனது நண்பர்களுடன் தன் கணவன் சீனிவாசனை கத்தியால் குத்தினார் என்பதையும் தன்னிடம் சம்மதம் பெற்று தான் அவர் இந்த சம்பவத்தை செய்தார் என்றும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இதையடுத்து மாலதி, சச்சிதானந்தம் இருவரையும் கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் போலீஸார். நீதிமன்ற உத்தரவின் பேரில் மாலதியை கோவை சிறையிலும் சச்சிதானந்தனை ஈரோடு சிறையிலும் போலீசார் அடைத்தனர். தலைமறைவாக இருக்கும் சச்சிதானந்தன் நண்பர்கள் 3 பேரையும் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Contact Us