மேற்கு ஆபிரிக்காவில் கொவிட் தொற்றுக்கு மத்தியில் மக்களை அச்சுறுத்தும் மற்றுமொரு நோய்

 

மேற்கு ஆபிரிக்கா நாட்டில் கொவிட்-19 நோய்க்கு மத்தியில் மார்பக் மற்றும் எபோலா தொற்றின் புதிய வெடிப்புகளை எதிர்கொள்கிறதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஆபிரிக்காவின் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிராந்திய பணிப்பாளர் மாட்ஷிடிசோ மொய்தி (Matshidiso Moeti)வியாழக்கிழமை இந்த தகவலை உறுதிபடுத்தினார்.

மேற்கு ஆபிரிக்க நாடான கோட் டிவார் திங்களன்று வணிக தலைநகரான அபிட்ஜானில் எபோலாவுக்கு எதிராக சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை ஆரம்பித்துள்ளது. இதேவேளை 1994 ஆம் ஆண்டிற்குப் பின்னர் கடந்த சனிக்கிழமை கோட் டிவாரில் முதல் எபோலா தொற்று அறிவிக்கப்பட்டது.

அண்டை நாடான கினி குடியரசிலிருந்து பயணம் செய்த 18 வயது சிறுமியே தொற்றுக்குள்ளானவர் என கோட் டிவார் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரம் கினி குடியரசிலுள்ள சுகாதார அதிகாரிகள் எபோலாவைப் போன்ற ஒரு மர்பர்க் வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழந்தாக உறுதி செய்தனர்.

ஏனைய பிராந்தியங்களை விட ஆபிரிக்கா ஒவ்வொரு ஆண்டும் அதிக தொற்று நோய் வெடிப்புகளை எதிர்கொள்கிறது. குறிப்பாக மேற்கு ஆபிரிக்காவின் சுகாதார அமைப்புகள் கண்டத்தின் மற்ற பகுதிகளை விட பலவீனமாக உள்ளது.

இதற்கிடையில் கடந்த மாதத்தில் மேற்கு ஆபிரிக்கா கொரோனா தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து அதிக எண்ணிக்கையிலான கொரோனா இறப்புகளைப் பதிவு செய்துள்ளது.

மேலும் கோட் டிவார், கினியா மற்றும் நைஜீரியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில், மார்பக் மற்றும் எபோலா போன்ற புதிய தொற்றுகளுக்கும் அங்குள்ள் மக்கள் முகங்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Contact Us