மீண்டும் லிப் லாக் புகைப்படத்தை வெளியிட்ட வனிதா.. செய்த சேட்டையால் காண்டேறிய நெட்டிசன்கள்!

 

தமிழ் சினிமாவில் விஜயகுமார்-மஞ்சுளா நட்சத்திர தம்பதிகளின் மூத்த மகளான வனிதா, விவாகரத்து ஆகாத பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டு சமூகவலைதளங்களில் பேசும் பொருளாக மாறி விட்டார். பின்பு அதையெல்லாம் பொருட்படுத்தாத வனிதா, பிரபல சேனல்களில் நடைபெறும் ரியாலிட்டி ஷோக்களில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தனது குழந்தைகளை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் யூடியூப் சேனல்களை நடத்திவரும் வனிதா, சுவாரசியமான பல தகவல்களை சோசியல் மீடியாவில் அப்லோட் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தன்னை அவமரியாதையாக நடத்தியதாக கூறி நிகழ்ச்சியிலிருந்து நடிகை வனிதா விஜயகுமார் வெளியேறி இருந்தார்.

அவர் வெளியேறியதற்கு நிகழ்ச்சியின் நடுவராக உள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன் தான் காரணம் என்றும் குறிப்பிட்டிருந்தார். வனிதா இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ரசிகர்கள் பலருக்கும் ஏமாற்றத்தை தந்தது

இந்நிலையில் வனிதாவின் மகள் ஜோவிகாவின் 16வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆனது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

இந்த புகைப்படத்தில் வனிதா தனது மகள் ஜோவிகாவை லிப் லாக் கொடுத்துள்ளார். பின்பு அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதால், பலரது லைக் போட்டாலும், சிலர் ‘என்ன எழவுடா இது, பிள்ளைகளையும் கெடுத்து விடாதே என்று திட்டித் தீர்க்கின்றனர்.

 

 

Contact Us