பிரபுதேவா ஹோட்டல் ரூம் பக்கத்திலேயே நயன்தாராவுக்கும் ரூம் போட்ட படக்குழு.. பயத்தில் விக்னேஷ் சிவன்

நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவனை நீண்ட வருடமாக காதலித்து வந்தாலும் இன்னும் அவரை சுற்றிய பழைய காதல் கிசுகிசுக்கள் ஓய்ந்தபாடில்லை. சிம்பு நயன்தாரா, பிரபுதேவா நயன்தாரா என தினமும் ஒரு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் தற்போது செம சுவாரஸ்யமான செய்தி ஒன்று கிடைத்துள்ளது. தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் இயக்கிவரும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.

மேலும் இன்னொரு கதாநாயகியாக சமந்தா நடித்து வருகிறார். காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. அங்குதான் ஒரு டிவிஸ்ட்.

அதே பாண்டிச்சேரியில் தான் பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. குலேபகாவலி என்ற படத்தை எடுத்த கல்யாண் இயக்கத்தில் அந்த படம் விறுவிறுப்பாக உருவாகிக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் பிரபுதேவா தங்கியிருக்கும் ஹோட்டலில் தான் நயன்தாராவுக்கும் படக்குழுவினர் ரூம் போட்டுக் கொடுத்துள்ளார்களாம். அதுவும் ஒரே தளத்தில் பக்கத்து பக்கத்து அறையை புக் செய்து விட்டார்களாம். இது நயன்தாராவுக்கும் தெரியாது, பிரபுதேவாவுக்கும் தெரியாது.

ரூம் போட்டு ஒரு நாள் தங்கிய அடுத்த நாள்தான் விக்னேஷ் சிவனுக்கே தெரிய வந்ததாம் பிரபுதேவா இந்த ஹோட்டலில் இருக்கிறார் என்று. இதனால் நயன்தாராவை எப்படி பிரபுதேவாவிடம் இருந்து காப்பாற்றுவது என படம் எடுப்பதை விட அதிகமாக யோசித்துக் கொண்டிருக்கிறாராம் விக்னேஷ் சிவன்.

Contact Us