இனி என்னை யாருடா கட்டிக்குவா.. -வாலிபர் செஞ்ச வேலையால் அலறிய பெண்.

 

பீகார் மாநிலம் நாளந்தாவில் வசிக்கும் 19 வயதான பெண் அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். அவரை ஒரு வாலிபர் ஒரு தலையாக காதலித்து வந்தார் .அதனால் அந்த பெண்ணிடம் தன்னுடைய காதலை பலமுறை கூறியும் அவர் கண்டுகொள்ளவில்லை .

இதனால் அந்த வாலிபர் அந்த பெண்ணை பழி தீர்க்க நினைத்தார். அதன் படி அந்த பெண் கடந்த வாரம் தன்னுடைய உறவினரோடு அங்குள்ள ஒரு பூங்காவிற்குள் போக வந்தார் .அப்போது எதிரே ஒரு பைக்கில் ஆசிட் பாட்டிலோடு வந்த அந்த வாலிபர் அந்த பெண்ணின் மீது ஆசிடை வீசி விட்டு சென்று விட்டார் .இதில் அந்த பெண்ணின் முகம், கை, கால் உள்பட பல பகுதிகள் தீ காயம் பட்டது. கிட்ட தட்ட 60 சதவீத பகுதிகள் வெந்து போன நிலையில் கிடந்த அந்த பெண்ணை அருகிலிருந்தவர்கள் மீட்டு அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது .பின்னர் போலீசுக்கு இந்த சம்பவம் பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து அந்த இடத்திற்கு வந்த போலீசார் அந்த வாலிபர் மீது வழக்கு பதிந்து , அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்து பார்த்து அந்த குற்றவாளிகளை தேடி வருகின்றனர்

Contact Us