துப்பாக்கிச்சூடு நடத்திய தாலிபான்கள்: இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

 

பொது இடத்தில் ஒரு பெண் பர்தா அணியாமல் இருந்ததால் தாலிபான் தீவிரவாதிகள் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தாலிபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர்.

மேலும் அந்நாட்டின் முக்கிய பகுதியான காபூல் நகரையும் கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கு தாலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் தலை விரித்தாடுகிறது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மக்கள் பலர் தங்கள் உயிருக்கு பயந்து அந்த நாட்டை விட்டு தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.

மேலும் ஆப்கானிஸ்தானில் ‘நாங்கள் இனி சண்டை போடமாட்டோம்’ என்று தாலிபான் தீவிரவாதிகள் உறுதியளித்த சில மணி நேரத்திற்குள் அங்கு ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் Takhar மாகாணத்தில் உள்ள Taloqan பகுதியில் ஒரு பெண் பொது இடத்தில் பர்தா அணியாமல் இருந்ததால் தாலிபான் தீவிரவாதிகள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதன்பின் அந்தப்பெண் நடுரோட்டிலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

அந்த பெண்ணின் உடலை கண்டு அவரது குடும்பத்தினர் கதறி அழும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் ஜலாலாபாத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் தாலிபான் தீவிரவாதிகள் கூறியதாவது “அரசு அலுவலகத்தில் தங்களது கொடியை பயன்படுத்த கூடாது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தேசிய கொடியை தான் பயன்படுத்த வேண்டும்” என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அப்போது போராட்டம் நடத்திய மக்களை நோக்கி தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Contact Us