உலகிலேயே முதல் முறை; DNA மூலம் கொரோனாவுக்கு மருந்து!

 

உலகிலேயே முதன்முறையாக மரபணுவை அடிப்படையாகக் கொண்டு கொரோனா தடுப்பூசி ஒன்றை இந்தியா உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசியை இந்தியாவின் பொது மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவின் சைடஸ் கெடிலா என்கிற மருந்து நிறுவனம், மரபணுவை அடிப்படையாகக் கொண்டு குறித்த தடுப்பூசியை தயாரித்துள்ளது.

இந்த கொரோனா தடுப்பூசியை 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தலாம் என இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் ஏ.என்.ஐ முகாமையிடம் கூறியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை உலகிலேயே சைகோவ் டி தான் மரபணுக்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us