கனடாவில் பட்டப்பகலில் இடம்பெற்ற கொள்ளை; பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

 

கனடாவின் பிரபலமான வங்கி ஒன்றில் பட்டப்பகலில் துப்பாக்கியுடன் புகுந்த நபர் ஒருவர் கொள்ளையடித்து தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் Nova Scotia மாகாணத்தில் உள்ள Halifax நகரத்தில் குறித்த சமத்துவம் இடம்பெற்றுள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் 6429 Quinpool Road-ல் உள்ள CIBC (Canadian Imperial Bank of Commerce) வங்கியின் உள்ளே, ஒரு அடையாளம் தெரியாத நபர் நுழைந்துள்ளார்.

குறித்த நபர் சற்று சந்தேகிக்கும் விதமாக நடந்துகொண்டதாக வங்கி ஊழியர்களில் ஒருவர் கூறியதுடன், அவர்கள் சுதாரித்துக்கொள்ளும் முன்பாக, அந்த நபர் தான் வைத்திருந்து துப்பாக்கியை காட்டி மிரட்டி பணத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளார். பின்னர் அவர் பணத்தை எடுத்துக்கொண்டு வங்கியிலிருந்து வேகமாக தப்பி ஓடிவிட்டதாக பொலிஸார் தெரிவைத்தனர்.

எனினும் அவர் எவ்வளவு பணத்தை எடுத்துக்கொண்டு சென்றார் என்பது வெளியிடப்படவில்லை. இந்நிலையில், அந்த கொள்ளையனை அடையாளம் காண் பொலிஸார், பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

கொள்ளையடித்துச்ச் சென்ற நபர் சராசரி உயரம் மற்றும் கட்டமைப்பைக் கொண்டிருந்தார் என்றும், Nike அடையாளத்தைக்க கொண்ட டிராக் பேன்ட் மற்றும் கண்களை மட்டுமே காட்டும் முகமூடியுடன், ஒரு கருப்பு கோட் அணிந்திருந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சந்தேக நபர் தொடர்பில் தகவல் தெரிந்த எவரும் 902-490-5020 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Contact Us