அமெரிக்காவை அவமானப்படுத்தும் விதமாக தாலிபான்கள் வெளியிட்ட புகைப்படம்!

 

அமெரிக்காவை அவமானப்படுத்தும் விதமாக தாலிபான்கள் வெளியிட்ட புகைப்படமானது சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது.

இதனையடுத்து தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய சில நாட்களிலேயே அவர்களின் சுயரூபத்தைக் காட்டத் தொடங்கிவிட்டனர். அவர்களுக்கு பயந்து அங்கிருக்கும் பொதுமக்கள் வெவ்வேறு நாடுகளுக்கு விமானத்தின் மூலம் தப்பித்து சென்று வருகின்றனர்.

சிலர் அங்கேயே முடங்கி உள்ளனர். அதிலும் தாலிபான்கள் அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்று கூறினர். ஆனால் தற்பொழுது அமெரிக்காவில் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஒருவரான Khalil Haqqani என்பவருக்கு அனுமதி அளித்துள்ளனர்.

இதுமட்டுமின்றி அமெரிக்காவின் ராணுவ உடைமைகளை கைப்பற்றினர். இதனை தொடர்ந்து தாலிபான்கள் அமெரிக்கா ராணுவத்தின் துப்பாக்கி, தொப்பி, உடை என அனைத்தையும் அணிந்து ஆப்கான் பகுதியை சுற்றி வலம் வருகின்றனர். மேலும் அமெரிக்காவை அவமானப்படுத்தும் செய்யும் விதமாக தாலிபான்கள் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

ஆனால் அந்த புகைப்படம் சரியாக எது என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அந்த புகைப்படமானது கடந்த 1945 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் ஜப்பான் இடையேயான போரில் Iwo Jima என்ற பகுதியானது அமெரிக்காவால் கைப்பற்றப்பட்டது.

அதனை அடையாளப்படுத்தும் விதமாக அமெரிக்கா ராணுவ வீரர்கள் அவர்கள் நாட்டுக் கொடியை அங்கு நிலைநாட்டினர். அதே போன்று தற்பொழுது தாலிபான்கள் அமெரிக்காவை கேலி செய்துள்ளனர்.

அதில் ராணுவ உடை, துப்பாக்கி போன்றவற்றை அணிந்த தாலிபான்கள் அவர்களின் கொடியை நிலை நாட்டுவது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த இரண்டு படங்களையும் ஒப்பிட்டு சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

இது அனைவரிடமும் பகிரப்பட்டு வருகிறது. இதனை கண்ட அமெரிக்கா அதிகாரிகள் பலரும் கோபத்தில் கொந்தளித்துள்ளனர். இந்த நிலையில் இது குறித்து எந்த ஒரு தகவலையும் தாலிபான்களின் தரப்பிலிருந்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us