செம மாஸ் லுக்கில் விக்ரம்…. மகான் படத்தின் பஸ்ட் லுக்… இணையத்தில் வெளியீடு….!!!

 

பிரபல இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் முன்னணி நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மகான். இத்திரைப்படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விக்ரம் புல்லட் பைக்கில் கூலர் கிளாஸ் அணிந்து செம மாஸாக இருக்கிறார்.

மேலும் அதனுடன் அவர் பின்னால் அம்மன் கைகள் போல நிறைய கைகள் இருக்கிறது. இந்த போஸ்டர் விக்ரமின் ஆறுமுகம் படத்தின் போஸ்டரைப் போலவே இருப்பதால் ரசிகர்கள் பலரும் Vintage விக்ரம் மீண்டும் வந்துவிட்டார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இப்படத்தில் பிரபல நடிகை சிம்ரன் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் நடிக்கின்றனர் என்றும் தெரியவந்துள்ளது

Contact Us