மனைவி மீதான சந்தேகத்தால் கழுத்தை நெரித்து கொன்ற கணவன்

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை சேர்ந்த இருசக்கர வாகன மெக்கானிக் ஜோதிஸ்(28), கர்நாடகா மாநிலம் ஜிகினியை சேர்ந்த வந்தனா(25) என்பவரை கடந்த 7 வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். இருவரும் ஒசூர் மாநகராட்சி எம்ஜி சாலையில் வசித்து வந்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு 6 வயதில் லத்தீஷ் என்கிற மகன் உள்ளான்.

இந்நிலையில் ஜோதிஸ், வந்தனா நடவடிக்கைகளால் சந்தேகம் கொண்டு அவ்வபோது சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று காலை கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாய்தகராறில் ஆத்திரமடைந்த ஜோதிஸ், மனைவி வந்தனாவை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு வழக்கறிஞரிடம் ஆலோசனை பெற்று இன்று மனைவியை கொலை செய்துவிட்டதாக ஒசூர் நகர போலீசில் சரணடைந்துள்ளார்.. சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி முனுசாமி எம்ஜி சாலையில் ஜோதிஸ் குடியிருந்த பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

Contact Us