மாஸ்டரை முந்தி முதலிடம் பிடித்த வலிமை.. இந்திய அளவில் தல ரசிகர்கள் செய்த சாதனை.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர்கள் அஜித்தும், விஜய்யும். அஜித் தற்போது வலிமை படத்திலும், விஜய் பீஸ்ட் படத்திலும் நடித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் என்னதான் ஒற்றுமையாக இருந்தாலும் இவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மோதிக்கொள்வது வழக்கம்தான்.

அஜித் பட அப்டேட் வரும்போது விஜய் ரசிகர்களும், விஜய் பட அப்டேட் வரும்போது அஜித் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் நெகடிவாக ஹேஷ்டேக் கிரியேட் செய்து அதை ட்ரெண்ட் செய்துவருவதும் வழக்கமான ஒன்றுதான். கடந்த ஒரு வருடமாக வலிமை அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் உலக அளவில் ட்ரெண்ட் செய்ததெல்லாம் வேற லெவல்.

தற்போதெல்லாம் ஒரு பெரிய நடிகரின் படம் பற்றிய அறிவிப்பு வரும்போது, அல்லது படம் வரும்போது அதைப்பற்றி ஹேஷ்டேக் கிரியேட் செய்து, அதை சமூக வலைத்தளங்களில் நம்பர் 1 இடத்திற்கு கொண்டுவருவதை மிகப்பெரிய சாதனையாகவே பார்க்கிறார்கள் ரசிகர்கள்.

அந்த வகையில் தற்போது ட்விட்டர் இந்தியா கடந்த ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில், அதாவது இந்த ஆண்டு முதல் பாதியில் அதிகம் ட்ரெண்ட் செய்யப்பட்ட ஹேஷ்டேக் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் தல அஜித்தின் வலிமை திரைப்பட ஹேஷ்டேக் முதலிடம் பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர் திரைப்பட ஹாஷ் டேக் இரண்டாம் இடத்தில் உள்ளது. அஜித்குமார் என்ற ஹேஷ்டேக் நான்காவது இடத்தையும், தளபதி65 என்ற ஹேஷ்டேக் ஐந்தாவது இடத்தையும் பெற்றுள்ளது.

இதனால் தற்போது அஜித் ரசிகர்கள் இணையத்தில் இந்த சாதனை குறித்து கொண்டாடி வருகின்றனர். இதில் ரஜினி, கமல் குறித்த ஹேஷ்டேக் ஏதும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us