அவுஸ்ரேலியாவில் இலங்கைத் தமிழ்க் குடும்பஸ்தர் தீ மூட்டித் தற்கொலை!!

 

கோனேஸ்வரன் கிருஷ்ணபிள்ளை என்பவருக்கு வயது 38. ஒரு துப்புரவு தொழிலாளராகப் பணிபுரிந்து வந்த அவர் தனது மனைவி மற்றும் அவரது மூன்று குழந்தைகளுக்கு இங்கிருந்து ஆதரவு வழங்கி வந்திருந்தார். திருகோணமலையைச் சேர்ந்த கோனேஸ்வரன் கிருஷ்ணபிள்ளை என்பவரின் குடும்பம் இராணுவத்தின் அச்சுறுத்தலுக்கு உள்ளானதால் அவர் சிறு குழந்தையாக இலங்கையிலிருந்து இந்தியாவிற்குத் தப்பிச் சென்றதாக அறியப்படுகிறது.

இவர் 2013ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் இந்தியாவிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வந்து புகலிடம் கோரினார்.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் மெல்பன் நகரில் உள்ள Sunshine என்ற இடத்தில் வசித்து வந்த தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தன்னைத் தானே எரியூற்றியதில் மரணமடைந்துள்ளார்.

Contact Us