திருந்தவே மாட்டார்களா ? …..? யாழில் காச்சல் என்று பார்க்கப் போன 25 பேருக்கு தொற்றிய கொரோனா

நாடு முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. தொற்று பரவல் வேகத்திற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அதில் முக்கியமானது- பொதுமக்களின் அலட்சியமும் முதன்மையான காரணங்களில் ஒன்று. தற்போது இலங்கையில் லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கூட, மக்கள் விசிட் எல்லாம் அடிக்கிறார்கள் என்பது தான் கொடுமையான விடையம். இதேபோல, தென்மராட்சி பிரதேசத்தில் பொதுமக்கள் சிலரின் விழிப்புணர்வற்ற நடவடிக்கையால் பலர் தாமாகவே வலிந்த தொற்றிற்குள்ளாகியுள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது.

வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த ஒருவர் அண்மையில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளார். அவர் தென்மராட்சி பகுதியை சேர்ந்தவர். ஊருக்குள் பரிச்சயமானவர் என்பதனால் பலர் அவரைப் பார்க்கச் சென்றுள்ளார்கள். அவர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு 3 நாட்கள் வீட்டில் இருந்துள்ளார். சாதாரண காய்ச்சல் என நினைத்தவர், விடாமல் தொடரவே, பரிசோதனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு தொற்று உறுதியானது. ஆனால் அவரைப் பார்க்க வந்து சென்ற 25 பேருக்கும் கொரோனா தொற்றியுள்ளமையும், உறுதியாகியுள்ளது. இதில் வயதான பாட்டி ஒருவரும் அடங்குகிறார். அவர் நிலமை கவலைக்கிடமாக உள்ளது. எப்பதான் இவர்கள் திருந்தப் போகிறார்கள் என்பது தெரியவில்லை ?

Contact Us