பிக்பாஸில் பாலாஜியுடன் இருந்த உறவை உறுதிப்படுத்திய ஷிவானி.. ரசிகர்களை தூக்கிவாரிப் போட்ட பதிவு

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது. இதில் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் முதலிடத்தை ஆரி அர்ஜுனன் பிடித்தது மட்டுமல்லாமல் 50 லட்சம் பரிசுத் தொகையையும் பெற்றார். இரண்டாமிடத்தை பாலாஜி பெற்றார். பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே காதல் மலர்வதுண்டு. அந்த வகையில் முதல் சீசனில் ஆரவ்-ஓவியா, இரண்டாவது சீசனில் மகத்-யாஷிகா, மூன்றாவது சீசனில் கவின்-லாஸ்லியா

அதேபோல் 4வது சீசனிலும் பாலாஜி-ஷிவானி ஜோடி பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும், ஷிவானி தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஆரி, நிஷா, பாலாஜி, ரியோ உள்ளிட்ட பலரையும் அழைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் ஷிவானியின் அம்மா முன்பே பாலாஜி, ஷிவானிக்கு கேக் ஊட்டும் படி எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டதால் ரசிகர்களிடையே வைரலாக பரவியது. எனவே இவர்கள் இருவரும் இன்னும் காதலிக்கிறார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், பாலாஜி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷிவானிக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதற்கு ஷிவானி நன்றி என்று பதில் அளித்துள்ளார். ரக்ஷா பந்தன் விழாவானது சகோதரன் சகோதரிகள் கொண்டாடும் விழா என்பதால் ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகி உள்ளனர்.

Contact Us