மகளை ஹீரோயினாக்க பல நூறு கோடிகளை இறக்கும் ஷாருக்கான்.. ரசிகர்களுக்கு விருந்து தான்!

முன்னணி நடிகர்கள் பலரும் தங்களுடைய வாரிசுகளை சினிமாவில் களம் இறக்குவதற்காக அவ்வப்போது கோடிகளை கொட்டுவது வழக்கம் தான். பெரும்பாலும் ஆண் நடிகர்களுக்கு தான் அப்படி ஒரு ரிஸ்க் எடுக்க நடிகர்கள் முன்வருவார்கள்.

 

ஆனால் பாலிவுட்டில் அப்படி இல்லை. ஆண் பிள்ளைகளைக் காட்டிலும் பெண் பிள்ளைகளை ஹீரோயின் ஆக்குவதில் அவர்களது அப்பாக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில் அந்த காலத்தில் முன்னணி நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களாக இருந்த பலரது மகள்களும் இப்போது பாலிவுட்டின் டாப் நடிகைகள்.

அந்த வகையில் தன்னுடைய மகளையும் டாப் ஹீரோயினாக மாற்றிவிட வேண்டும் என்பதற்காக மகள் சுகானா நடிக்கும் முதல் வெப்சீரீஸ் ஒன்றை மிக பிரம்மாண்ட முறையில் தயாரிக்க உள்ளார் ஷாருக்கான்.

ஷாருக்கான் தற்போது தமிழ் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். அதே நேரத்தில் ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராகவும் உள்ளார். விரைவில் ஐபிஎல் போட்டிகள் யுஏஇ பகுதிகளில் தொடங்க உள்ளது.

அதற்கிடையில் தன்னுடைய மகளான சுகானா என்பவர் நடிக்கும் புதிய வெப்சீரிஸ் ஒன்றை கிட்டத்தட்ட 100 கோடிக்கும் மேற்பட்ட செலவில் தயாரிக்க உள்ளாராம் ஷாருக்கான். இதனை நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் பல மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளாராம்.

முதல் என்ட்ரியே உலக அளவில் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறாராம் ஷாருக்கான். அதற்காக தற்போது தன்னுடைய மகள் சுகானாவுக்கு நடிப்பு பயிற்சி அனல்பறந்து கொண்டிருக்கிறதாம்.

 

Contact Us