அடுத்தவர்களுடன் போன மனைவி -தடுக்காத கணவன் -அடுத்து நடந்த விபரீதம் .

 

டெல்லி அருகே ஹரியானாவின் குருகிராமில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் முகமது ஷாஹித் என்ற நபர் தன்னுடைய மனைவியோடு வசித்து வந்தார் .ஷாஹித்துக்கு சரியான வருமானமில்லை .அதனால் அவரின் மனைவி அடிக்கடி பாலியல் தொழில் செய்து சம்பாதித்து வந்தார் .இதை அவரின் கணவரும் தடுக்கவில்லை .இந்நிலையில் அந்த பெண்ணை அதே பகுதியில் உள்ள ஒரு ஆட்டோ ட்ரைவர் ரிங்கு என்பவர் கடந்த வாரம் ஒரு நாள் இரவு குருகிராமில் அதுல் கட்டாரியா சவுக் அருகே உள்ள ஒரு ஹோட்டலுக்கு கூட்டி சென்றார் .

அதன் பிறகு அந்த பெண்ணை சச்சின் என்பவரும் அங்கு சந்தித்து ஒரு ரூமை புக் செய்தனர் .இந்நிலையில் அந்த பெண் அந்த ஹோட்டல் அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார் .

இதனால் அந்த ஹோட்டல் நிர்வாகம் அவரின் கணவருக்கு தகவல் தெரிவித்தது .அங்கு வந்த அவரின் கணவர் போலீசில் புகார் அளித்தார் .போலீசார் கொலை நடந்த ஹோட்டலுக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர் .அப்போது அந்த பெண்ணை கடைசியாக அந்த ஹோட்டல் அறையில் சந்தித்த சச்சின் என்பவர் கொலை செய்திருக்கலாம் என்ற தகவல் கிடைத்தது .இதனால் போலீசார் விசாரணை மேற்கொண்டு அந்த சச்சினை தேடி வருகின்றனர் .

Contact Us