பழிக்குப்பழி : நான்கு வருடம் காத்திருந்து போட்டுத்தள்ளிய கும்பல்

 

நான்காண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொலைக்கு பழிக்குப்பழியாக காத்திருந்து பழி தீர்த்திருக்கின்றனர். ரவுடி ஹரி கொலையில் 8 பேர் போலீஸில் சிக்கி இருக்கிறார்கள்.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் ஹரி. இவர் சார்மினார் போடும் வேலை செய்து வந்தார். இவருக்கு பவானி என்கிற மனைவியும், இரண்டு பெண் குழந்தை ஒரு ஆண் பிள்ளை உள்ளனர். நேற்று இரவு 11 மணி அளவில் தனது வீட்டிற்கு வெளியே அமர்ந்து மனைவியுடன் பேசிக் கொண்டிருந்திருக்கிறார் ஹரி. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 8 பேர் திடீரென்று சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டி இருக்கிறார்கள்.

ரத்த வெள்ளத்தில் சாய்ந்து துடிதுடித்துக் கொண்டிருந்த ஹரியை போட்டுவிட்டு 8 பேரும் தப்பி ஓடி இருக்கிறார்கள். மனைவி பவானி எழுப்பிய சத்தத்தை வைத்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ஹரியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஹரி உயிரிழந்திருக்கிறார்.

இதையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டதில் ஹரியை கொலை செய்தவர்கள் 8 பேரும் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.

கடந்த 2007ஆம் ஆண்டு ரவுடி பப்லுவை படுகொலை செய்யப்பட்டதால் அந்த முன்விரோதம் காரணமாக ரவுடி ஹரி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் 8 பேரிடமும் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டு வாசலில் மனைவியுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வியாசர்பாடியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Contact Us