தலைகீழாக தொங்கியபடி ரகுல் ப்ரீத் சிங்.. வைரலாகும் புகைப்படம்..!

 

தடையற தாக்க படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதன்பின் தீரன், தேவ், என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் அறிமுகமானது என்னவோ கன்னடா படத்தில்தான். ஆனால், முதல் படத்திற்குப்பின் இவர் கன்னடாவில் ஒரு படம்கூட நடிக்கவில்லை.

தடையற தாக்க படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதன்பின் தீரன், தேவ், என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் அறிமுகமானது என்னவோ கன்னடா படத்தில்தான். ஆனால், முதல் படத்திற்குப்பின் இவர் கன்னடாவில் ஒரு படம்கூட நடிக்கவில்லை.

தற்சமயம் தெலுங்கு, ஹிந்தியில் இவர் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர் அதிலிருந்து தேறிவந்த பின் தற்போது யோகாவில் கவனம் செலுத்தி வருகிறார். அடிக்கடி தனது இன்ஸ்டாவிலும் தான் யோகா செய்யும் படங்களை பதிவேற்றி வருகிறார்.

சமீபத்தில் ஏரியல் யோகா என்ற புதுவித யோகா ஒன்றை செய்து ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார். ஏரியல் யோகா என்பது ஒரு சிறிய துணியின் உதவியால் தொங்கியபடி தரையைவிட சற்று உயரத்தில் பறப்பது போன்ற ஒரு பயிற்சி ஆகும்.

அடிப்படை யோகா கற்றவர்களுக்கு இந்த ஏரியல் யோகா எளிதாக வந்துவிடும் என்கிறார் ரகுல் ப்ரீத் சிங். மேலும், இது போன்ற யோகா செய்யும்போது ஆரோக்கியமான உடல்நலத்திற்கு உதவுகிறது. என்னைப்பொறுத்தவரை உடற்பயிற்சி என்பது வெறும் உடல்ரீதியானது மட்டுமல்ல, மன ரீதியான மற்றும் உணர்வு ரீதியானதும் கூட என்றார்.

என்னதான் உங்கள் உடல்நிலையை வெளிப்புற காரணிகள் தீர்மானித்தாலும், எல்லா நேரங்களிலும் நீங்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். முன்பைவிட இப்போதுதான் உடல்நலத்துடன் இருக்கவேண்டியது அவசியம்.

இதுவரை நீங்கள் யோகா செய்யாவிட்டால் உடனே செய்ய தொடங்குங்கள் என கூறியுள்ளார். இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் அயலான், கமலுடன் இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

Contact Us