காலில் விழுந்த அமெரிக்கா- தலிபான்களோடு CIA தலைவர் சந்திப்பு என்ன நடந்தது ?

அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ யின் தலைவர், தலிபான் தலைவரை ரகசியமாக சந்தித்த விடையம் அம்பலமாகியுள்ளது. காபூல் விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ள கட்டடம் ஒன்றில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முழு ஆப்கான் நாட்டையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில். இனி அமெரிக்காவால் எதனையும் செய்ய முடியாத நிலை தோன்றியுள்ளது. தலிபான்களுக்கும் அமெரிக்காவுக்கு ஒரு ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது. இதன் காரணத்தால் தான் இன்றுவரை அவர்கள் விமான நிலையத்தை தாக்கி கைப்பற்றவில்லை. அதனால் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் மெதுவாக அங்குள்ள வெளிநாட்டவர்களை வெளியேற்றி வருகிறது. இன் நிலையில் தான்…

சி.ஐ.ஏ தலைவர் வில்லியம் பேர்ன்ஸ் ரகசியமாக காபூச் சென்று, தலிபான் தலைவர் அப்துல் கணியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. வரும் 31ம் திகதி வரை தமக்கு நேரம் தருமாறு அமெரிக்கா கோரியுள்ளது. இதனை விட வெக்கக் கேடான விடையம் வேறு ஒன்றும் இல்லை என்கிறார்கள் அரபு நாட்டவர்கள்.

Contact Us