விரைவில் பிக் பாஸ் சீசன் 5 டீசர்.. எதிர்பார்ப்பை கிளப்பிய அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால், தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் வெளியிடப்பட்டது. இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில், ஐந்தாவது சீசன் பற்றிய சுவாரசியமான தகவல் தற்போது கிடைத்துள்ளது.

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியானது ஜூன் மாதம் தொடங்கி, அக்டோபர் மாதம் முடிவடையும். ஆனால் சென்ற வருடம் கொரோனா தாக்கத்தினால் அக்டோபர் மாதம் தொடங்கி, ஜனவரி மாதம் முடிவடைந்தது.

அதேபோன்று பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையும் அக்டோபர் மாதம் துவங்கப்பட உள்ளது. இந்தச் சீசனையும் கமலஹாசன் தொகுத்தும் வழங்குவதால், இன்று அவரை வைத்து புரோமோஷன் வீடியோ ஷூட் எடுக்கப்படவுள்ளது.

அதேபோல் போட்டியாளர்கள் பற்றிய இறுதி தேர்வு நடைபெற்று வருகிறதாம். மேலும் இந்த சீசனில் மற்ற சீசனை காட்டிலும் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்திகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் முதல் இடத்தை பிடித்தனர்.

டிஆர்பி- இல் மற்ற சேனல்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது. ஆகையால் இத்தகைய தகவல்கள் ஆனது பிக்பாஸ் ரசிகர்களிடையே காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

Contact Us