பிக் பாஸ் சீசன் 5 புரோமோ ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கசிந்த புகைப்படம்

 

இப்போதைக்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். அந்த நிகழ்ச்சியில் ரியாலிட்டி கொஞ்சம்கூட இல்லை என தெரிந்தும் அதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக தான் இருக்கின்றனர்.

ஹிந்தியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது தென்னிந்திய சினிமாவை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. தென்னிந்திய மொழிகளில் உள்ள தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சிகளை விஜய் டிவி ஒளிபரப்பி வருகிறது. விரைவில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான வேலைகளும் தொடங்க உள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

அதன் முதற்கட்டமாக பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் புரோமோ படப்பிடிப்புகள் சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகின்றன. இதில் கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளார்.

புரோமோ நிகழ்ச்சியின் படப்பிடிப்பிலிருந்து கமல்ஹாசனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. வழக்கம்போல இந்த வாட்டியும் செம மாஸாக உள்ளார் உலகநாயகன் கமலஹாசன்.

செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டுவிடும் என விஜய் டிவியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Contact Us