“உன்னை லவ் பண்ணதுக்கு பலான தொழிலே பண்ணியிருக்கலாம்டா” -காதலனால் குதறப்பட்ட பெண்

 

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் புத்வார் பேத்தைச் சேர்ந்த 40 வயதான நபர் ஒருவர் ஏற்கனவே கல்யாணமானவர் .அவர் அந்த பகுதியில் வசிக்கும் பாலியல் தொழில் செய்யும் பெண்ணை காதலித்து வந்தார் .பிறகு அவரை கல்யாணம் செய்து கொள்வதாக கூறி அந்த பெண்ணை வைத்து தொழில் நடத்தும் தரகரிடமிருந்து கூட்டி வந்து ஒரு தனி வீடு எடுத்து வாடகைக்கு குடி வைத்தார் .

இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு பிறகு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது .அதனால் அந்த நபர் அந்த பெண்ணை அந்த வீட்டினுள் வைத்து பூட்டி விட்டு போனார் .பிறகு அந்த பெண் தப்பித்து போனார் .அதை தெரிந்துகொண்ட அவர் மீண்டும் அந்த பெண்ணை அந்த வீட்டிற்கு கூட்டி வந்து ,அவரை கொலை செய்தார் .பிறகு அவரின் உடலை பல பாகங்களாக கூறு போட்டார் .அதன் பெண்ணின் உடல் பாகங்களை மூன்று பெட்டியில் அடைத்து வைத்து அதை தூக்கி சென்றார்

பிறகு அந்த உடலை பிராங்குட்-லாவாசா சாலையில் உள்ள முத்தா காட்டில் அப்புறப்படுத்தினார். பின்னர் அந்த பெண்ணை காணாததால் அந்த பெண்ணின் தரகர் போலீசை அணுகினார் .போலீசார் வழக்கு பதிந்து தேடி வந்தனர் .பிறகு அந்த பெண்ணின் காதலனிடம் விசாரணை நடத்தி ,அவர் கொன்றதை கண்டுபிடித்தனர் பிறகு அவர் மூலம் அந்த பெண்ணின் உடல் பாகங்களை 10 நாட்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மீட்டெடுத்து விசாரணை செய்து வருகின்றனர்

Contact Us