பசியும் பட்டினியுமாக காத்திருக்கும் ஆப்கன் மக்கள்…. அமெரிக்க வீரர்களின் மனதாபிமானம்….

 

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றி அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பாக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டிலிருக்கும் பொதுமக்கள் தலிபான்களுக்கு பயந்து அங்கிருந்து வெளியேறுவதற்காக தலைநகர் காபூலிலுள்ள விமான நிலையத்தின் முன்பாக பல நாட்களாக பசியும் பட்டினியுமாக காத்திருக்கிறார்கள்.

இவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல அமெரிக்க நாட்டின் ராணுவ படையினர்கள் உதவி புரிந்து வருவதோடு மட்டுமின்றி பசியோடுயிருக்கும் குழந்தைகளுக்கு உணவையும் வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் காபூல் விமான நிலையத்தின் முன்பாக காத்திருக்கும் சிறுவர்களுடன் அமெரிக்க நாட்டின் ராணுவ படையினர் கொஞ்சி விளையாடுவது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Contact Us