பெண்கள் கால்பந்து அணி…. பீதியில் ஆப்கான் வீராங்கனைகள்…. தகவல் தெரிவித்த பயிற்சியாளர்….!!

 

ஆப்கானிஸ்தான் கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2001 வரை தலீபான்களின் பிடியில் தான் இருந்ததுள்ளது. அப்போது கால்பந்து போன்ற பல விளையாட்டுகளுக்கு தலீபான்கள் தடைவிதித்துள்ளனர். மேலும் ஆண்களின் துணை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்ற பெண்கள் கொடூரமாக பாலியல் வன்புணர்தலுக்கு ஆளாக்கப்பட்டார்கள்.

இதனையடுத்து தலீபான்களின் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு ஆப்கானிஸ்தான் மக்கள் சுதந்திரமாக வாழ ஆரம்பித்துள்ளனர். அதன்பின் ஆப்கானிஸ்தான் பெண்கள் கால்பந்து விளையாட்டில் விளையாடி பிரபலமாகியுள்ளனர். ஆனால் தற்போது தலீபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். எந்த விளையாட்டு அன்று பெண்களை பிரபலமாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பியதோ அதுவே தற்போது பெண் வீராங்கனைகளுக்கு பிரச்சனையாக அமைந்துள்ளது.

அதாவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட விளையாட்டுகள் மூலம் தலீபான்கள் வீராங்கனைகளை அடையாளம் கண்டு சித்திரவதை செய்வார்கள் என்ற அச்சம் அவர்களிடையே தோன்றியுள்ளது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் கால்பந்து அணியின் வீராங்கனைகளில் ஒருவரான Wida Zemarai அணியின் கோல் கீப்பராக இருந்து பின் பயிற்சியாளராக மாறியுள்ளார். இவர் தலீபான்கள் குறித்து கூறியதாவது “தலீபான்கள் பெண்களை பாலியல் வன்புணர்தல் மற்றும் புனிதப்போர் செய்வதற்காக தேர்வு செய்கின்றனர். மேலும் அவர்களிடம் ஒரு பெண் சிக்கிவிட்டால் அவளை சாகும்வரை பாலியல் வன்புணர்தலுக்கு அடிமையாக்கி சித்திரவதை செய்வார்கள்” என கூறியுள்ளார்.

Contact Us