தனது பிள்ளை கறுப்பாக பிறக்கும் என்று கூறிய நபரை அடையாளம் காட்ட போவதாக சொல்லும் மெகான்: TV நிகழ்ச்சி எகிறுகிறது …

பிரித்தானிய அரச குடும்பத்தில் தான் இருந்தவேளை, தனது பிள்ளை எவ்வளவு கறுப்பாக பிறக்கப் போகிறது என்று நக்கலடித்த நபரை தான் அடையாளம் காட்டப் போவதாக மெகான் மார்கள் தெரிவித்து மேலும் சர்சையைக் கிளப்பி உள்ளார். அவர் யாரை பார்த்து கை காட்டப் போகிறார் என்பது தெரியவில்லை. ஆனால் அது நிச்சயம் அரச குடும்ப அங்கத்தவர்களில் ஒருவராக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இல்லையேல் மூத்த அதிகாரிகளாக கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பிரபல்யமான TV நிகழ்ச்சி தொகுப்பாளி ஓப்ராவின் அடுத்த நிகழ்சியில் தான் இந்தக் குண்டை தூக்கிப் போட இருக்கிறார் மெகான்… இப்படி நடந்தால்..

இது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. ஓப்பிராவுக்கு தனது நிகழ்ச்சியின் டி.ஆ.பி ரேட் உயரவேண்டும் என்பதே ஒரே குறிக்கோள். மெகானுக்கோ தனக்கு பணம் வரவேண்டும் புகழ் வரவேண்டும் என்று எதிர்பார்கிறார். இதற்கு பிரித்தானிய அரச குடும்பம் தான் கிடைத்துள்ளது இவர்களுக்கு.

Contact Us