ரஜினியுடன் ‘அண்ணாத்த’ பட ஒளிப்பதிவாளர்… செம வைரல் புகைப்படம்…!!!

 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. சிவா இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, சூரி, சதீஷ், கருணாகரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படம் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி தினத்தில் தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினியுடன் ஒளிப்பதிவாளர் வெற்றி இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Contact Us