நண்பரை உயிருடன் புதைத்த வாலிபர்கள் – மார்மளவு மண் மூடியபோது மரணபயத்தில் கதறல்

 

மதுபோதையில் நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் ஒரு நண்பரை உயிருடன் புதைக்க முற்பட்டிருக்கின்றனர். மார்புக்கு மேல் மண்ணைத் தள்ளி மூடியபோது உயிர் பயத்தில் அலறிய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வர தப்பியோடி இருக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

முத்தையாபுரம் கிருஷ்ணா நகர் தெருவை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் பெயிண்டர் ஆக இருந்து வருகிறார். முத்தையாபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த தேவ ஆசீர்வாதம், முள்ளக்காடு தேவி நகரைச் சேர்ந்தவர் முனியசாமி, கக்கன்ஜி நகரை சேர்ந்த இசக்கி மணி ஆகிய நான்கு பேரும் நண்பர்கள்.

பெயிண்டர் அஜித்குமார் செல்போன் வாங்குவதற்காக 5 ஆயிரம் பணத்தை தேவ ஆசீர்வாதத்திடம் இருந்து கடனாக வாங்கி இருக்கிறார். ஆனால் அந்த பணத்தை நான்கு பேரும் சேர்ந்து மது குடித்து செலவு செய்திருக்கிறார்கள். இதன் பின்னர் உப்பளம் அருகே இருக்கும் காட்டுப் பகுதியில் நேற்று முன்தினம் 4 பேரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்திக் கொண்டு இருந்திருக்கிறார்கள்.

அப்போது தேவ ஆசீர்வாதம் தான் கொடுத்த ஐந்தாயிரத்தை அஜீத் குமாரிடம் கேட்டிருக்கிறார். எல்லோரும் சேர்ந்து தானே அந்த படத்தை குடித்து வைத்தோம். என்னிடம் மட்டும் கொடு என்று சொன்னால் நான் எப்படி தரமுடியும் என்று சொல்லியிருக்கிறார் அஜித்குமார். இதில் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த தர்ம முனியசாமி, இசக்கி மணி ஆகியோர் கம்பை எடுத்து அஜித்குமாரை தாக்கியிருக்கிறார்கள். தேவஆசீர்வாதம் கையில் வைத்திருந்த கத்தியால் குத்தி இருக்கிறார்.

அப்படியும் ஆத்திரம் தீராததால் அஜித்குமாரை உயிருடன் புதைத்து கொன்று விடவேண்டும் என்று முடிவு செய்திருக்கின்றனர். அதன்படி அங்கிருந்த குழியில் அஜீத் குமாரை தள்ளிவிட்டு மண்ணை அள்ளிப்போட்டு மூடியிருக்கிறார்கள் மார்பளவு வரைக்கும் வந்ததும் மரண பயம் வந்து பலர் அலறியிருக்கிறார் அஜித்குமார். அந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வரவும் மூன்று பேரும் தப்பி ஓடியிருக்கின்றனர்.

அஜீத் குமாரை மீட்டு போலீசில் ஒப்படைத்துள்ளனர் பொதுமக்கள். இதனையடுத்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கி மணி, தேவ ஆசீர்வாதம், முனியசாமி ஆகிய 3 பேரையும் கைது செய்திருக்கின்றனர்.

Contact Us