“என் புருஷன் வெளியே போயிட்டாரு ,நீ உள்ளே வா…”பெண்ணோடு சிக்கிய வாலிபருக்கு நேர்ந்த கதி

 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கலோல் தாலுகாவின் மோதி போயன் கிராமத்தில் 30வயதான கல்யாணமாகாத வாலிபர் வசித்து வந்தார் .அந்த வாலிபருக்கும்,  அதே ஊரில் உள்ள ஒரு திருமணமான ஒரு பெண்ணுக்கும் கடந்த ஒரு வருடமாக கள்ள உறவு இருந்து வந்துள்ளது. அந்த பெண் அவரின் கணவருக்கு தெரியாமல் அந்த வாலிபருடன் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் இந்த விஷயம் அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரின் சகோதரர் மற்றும் சில உறவினர்களுக்கு தெரிய வந்துள்ளது .அதனால் அந்த பெண்ணையும் அவரின் காதலனையும் பிடிக்க திட்டமிட்டனர்.

அதன் படி அந்த பெண்ணின் கணவர் கடந்த சனிக்கிழமை இரவு வெளியே சென்று விட்டார் .அதனால் அந்த பெண் சனிக்கிழமை தனது கணவர் சோட்டிலாவிற்குச் சென்றுவிட்டார் என்றும் அப்போது தான் தனியாகத்தான் இருப்பேன் என்றும் கூறி அவரின் காதலனை வீட்டிற்கு அழைத்தார், .அவரின் பேச்சை நம்பி அந்த காதலன் அந்த வீட்டினுள் வந்தார்.

பின்னர் அந்த பெண் அந்த வீட்டு கதவை தாழ் போட்டார். பிறகு அந்த வீட்டின் கதவை உடைத்து கொண்டு அவரின் மைத்துனர் மற்றும் கணவர் மற்றும் உறவினர்கள் அந்த வீட்டினுள் வந்தனர். பின்னர் அந்த பெண்னோடிருந்த வாலிபரை அடித்தனர். அப்போது அந்த வாலிபர் அந்த பெண்ணின் கணவரிடம் தன்னை அவரின் மனைவிதான் கூப்பிட்டார் என்று சொல்லியும் கேட்காமல் அவரை உதைத்து காயப்படுத்தினர். இது பற்றி கேள்விப்பட்ட போலீசார் அந்த வீட்டினுள் வந்து அந்த வாலிபரை மீட்டு ஆஸ்ப்பிட்டலில் சேர்த்தனர். மேலும் வாலிபரை தாக்கிய அந்த எட்டு பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருக்கின்றனர் .

Contact Us