தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படப்பிடிப்பு… இணையத்தில் கசிந்த புகைப்படம்…!!!

 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் திருச்சிற்றம்பலம் படத்தை மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். ஏற்கனவே இவர் தனுஷின் குட்டி, உத்தமபுத்திரன், யாரடி நீ மோகினி ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அதில் தனுஷ், ராஷி கண்ணா இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Contact Us