நெயில் பாலிஷ் பூசும் பெண்களின் விரல்களை துண்டிக்க தாலிபான் உத்தரவு

 

ஆப்கானிஸ்தானில் இருந்து தாலிபான்களின் கொடுங்கோல் ஆட்சி குறித்த செய்திகள் தினமும் வெளிவருகின்றன. தாலிபான்கள் வசம் ஆப்கான் வந்ததும், மக்களை பழி வாங்குவது போன்ற மனநிலையில், ஆப்கானிஸ்தான் மக்களை துன்புறுத்துகின்றனர். தாலிபான்கள் பெண்கள் ஜீன்ஸ் அணியக் கூடாது என தடை விதித்துள்ளனர்,. அதோடு, பெண்கள் கை விரல்களில் நெயில் பாலிஷ் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவுகளை மீறினால் தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று பயங்கரவாதிகள் எச்சரித்துள்ளனர். சமீபத்தில் சில இளைஞர்கள் கூட ஜீன்ஸ் அணிந்ததற்காக கொடூரமாக தாக்கப்பட்டனர்.

தி சன்’ பத்திரிகையில் வெளியான செய்தி ஒன்று, ஆப்கானிஸ்தான் இளைஞன் ஒருவர் எதிர்கொண்ட தாலிபான்களின் அராஜகம் குறித்த செய்தியை வெளியிட்டது. மேலும் ஜீன்ஸ் அணிந்ததற்காக அவரும் அவரது நண்பர்களும் கடுமையாக தண்டிக்கப்பட்டதாக கூறினார். அந்த இளைஞர் தனது நண்பர்கள் சிலருடன் காபூலின் வீதிகளில் நடந்து சென்று கொண்டிருந்த போது, தலிபான்கள் அவரை தடுத்ததாக கூறினார். மேலும் ஜீன்ஸ் அணிவது இஸ்லாத்திற்கு அவமரியாதை என்று விவரித்து, பயங்கரவாதிகள் முதலில் அவர்களைத் தாக்கினர், பின்னர் அவர்களிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, தவறை மீண்டும் செய்ய வேண்டாம் என்று எச்சரித்ததாக அந்த இளைஞன் தெரிவித்தார்.

Contact Us