ஒரு வாரத்தில் போகவில்லை என்றால் போரில் சந்திக்கலாம்: இங்கிலாந்தை எச்சரிக்கும் தாலிபான்

 

பிரிட்டிஷ் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தாலிபான் காலக்கெடு விதித்துள்ளது. ஒரு வாரத்திற்குள் பிரிட்டிஷ் இராணுவம் ஆப்கானிஸ்தானிலிருந்து செல்லவில்லை என்றால், அதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தாலிபான் பயங்கரவாத அமைப்பு கூறியுள்ளது.

காபூல் விமான நிலையம் தற்போது அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளும் தங்கள் குடிமக்களையும் ஆப்கானியர்களையும் வெளியேற்றி வருகின்றனர். தற்போது இருக்கும் சூழலில், முழு மீட்புப் பணியையும் ஒரு வாரத்தில் முடிப்பது சாத்தியமில்லை. இத்தகைய சூழ்நிலையில், தாலிபான்களின் (Taliban) காலக்கெடு பிரிட்டனின் கவலையை அதிகரித்துள்ளது.

Contact Us