ஆஸ்திரேலிய இளைஞரின் மண்டை உடைத்த தாலிபான்கள்.. வைரலாகும் பரபரப்பு காணொளி

 

ஆஸ்திரேலிய நாட்டின் இளைஞர் ஒருவரைத் தாலிபான்கள் கொடூரமாகத் தாக்கி மண்டையை உடைத்துள்ளனர். தலையில் இருந்து ரத்தம் சொட்ட சொட்ட அவர் எடுத்துள்ள காணொளி இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. காபூல் விமான நிலையத்தைச் சுற்றிலும் அதிகளவிலான மக்கள் கூடி வருகின்றனர். இவர்களைக் கட்டுப்படுத்த தாலிபான்கள் எடுக்கும் நடவடிக்கைகள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

பொதுமக்களைப் பிடித்துத் தள்ளுவது, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சூடுவது எனத் தாலிபான்களின் செயல்பாடுகள் குழப்பத்தை அதிகப்படுத்துவது போலவே உள்ளது.

இந்நிலையில், காபூல் விமான நிலையத்திற்குச் செல்லும் ஆஸ்திரேலியா இளைஞர் ஒருவரைத் தாக்கி அவரது, மண்டையைத் தாலிபான்கள் உடைத்துள்ளனர்.

இது தொடர்பான காணொளி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

Contact Us