பல நாள் கனவை நிறைவேற்றிய யோகி பாபு..

 

கூட்டத்தில் ஒருவராக இருந்து தனது திறமை மற்றும் விடா முயற்சியால் தற்போது தமிழ் சினிமாவில் நம்பர்-1 காமெடி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் யோகிபாபு. அனைத்து நடிகர்களையும் பின்னுக்கு தள்ளி எந்தவித போட்டியும் இன்றி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் யோகி பாபு தற்போது அனைத்து படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இவர் இல்லாத படங்களே இல்லை என்ற அளவிற்கு கைவசம் ஏராளமான படங்களை வைத்துள்ளார்.

நடிகர் யோகிபாபு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உடையவர். என்னதான் படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் சமீபத்தில் கூட இவர் தன்னுடைய குடும்பத்துடன் குலதெய்வ கோவிலில் வழிபாடு நடத்தியிருந்தார். இந்நிலையில் யோகி பாபு அவரது சொந்த இடத்தில் கோவில் ஒன்றை கட்டி கும்பாபிஷேகமும் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல் நகரம் பேடு கிராமத்தில், நடிகர் யோகிபாபுவிற்கு சொந்தமாக இடம் உள்ளது. அங்கு வாராஹி அம்மனுக்கு கோவில் கட்டி வெகுவிமர்சையாக இன்று கும்பாபிஷேகத்தை நடத்தி உள்ளார். இதில் யோகிபாபுவின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். யோகிபாபுவுக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் யோகிபாபு நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே தனது டைமிங் காமெடி மற்றும் திறமை காரணமாக விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் இடம் பிடித்தார். அதுமட்டுமின்றி யோகிபாபுவை பல நடிகர்கள் தங்களது படங்களில் ஒப்பந்தம் செய்ய விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அந்த அளவிற்கு இவரது காமெடி ரசிகர்களிடத்தில் எளிதாக சென்றடைகிறது.

யோகி பாபு காமெடி வேடங்களில் மட்டும் நடிக்காமல் சில காமெடி படங்களிலும் நாயகனாக நடித்துள்ளார். அதேசமயம் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என கூறாமல் தன்னை தேடி வரும் அனைத்து விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று சிறப்பாக நடித்து வருகிறார். தற்போது இவரின் கைவசம் எக்கச்சக்கமான படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Contact Us