சீனாவின் சொனிக் துப்பாக்கி- தொலைவில் உள்ள ஆட்களை தாக்கும்- அமெரிக்க எம்பாசி ஆட்கள் பாதிப்பு !

கோவிட் வைரஸை பரப்பிய சீனா தற்போது, சொனிக் சூப்பர் துப்பாக்கியை தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்னர் வியன்னா மற்றும் பேர்லின் ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்க தூதுவராலயத்தில் வேலை பார்த்த பலருக்கு திடீரென கடும் தலைவலை ஏற்பட்டுள்ளது. இது ஒருவருக்கு மட்டும் ஏற்படவில்லை. அங்கே உள்ள பலருக்கு ஒரே நேரத்தில் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அனைவரும் வாந்தி எடுத்துள்ளதோடு உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இப்படி ஒரே வேளையில் அனைவருக்கும் எப்படி நடக்கும் ? என்று அமெரிக்க புலனாய்வுத் துறை பெரும் விசாரணையில் இறங்கியது…

அவர்கள் கண்டு பிடித்த விடையம் உலகையே உலுப்பி உள்ளது. சீனா ரகசியமாக ஒரு ஆயுதத்தை தயாரித்து பரிசோதனை செய்து பார்த்துள்ளது என்பது தான் அந்த விடையம். சொனிக் என்று சொல்லப்படும், ஒரு அலைக் கற்றை ஒன்றை உருவாக்கி, அதனை ஒரு திசை நோக்கி சீனா அனுப்புகிறது. குறித்த திசையில் உள்ள, மனிதர்கள் மற்றும் விலங்கினத்தை இந்த அலைக் கற்றை தற்காலிகமாக பாதிக்கும். அவர்களுக்கு தலைவலி, வாந்தி போன்றவை வருவதோடு, உடல் நலக் குறைவும் திடீரென வரும். இப்படியான படு பயங்கரமான ஆயுதத்தை சீனா தயாரித்துள்ளது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

Contact Us