கனேடிய மாகாணம் ஒன்றில் வெடிவிபத்து: தரைமட்டமான இரண்டு வீடுகள்… 3 பேர் காயம்

 

கனேடிய மாகாணமான ஒன்ராறியோவில் நடந்த வெடிவிபத்து ஒன்றில் இரண்டு வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. Wheatley என்ற இடத்தில் நேற்று மாலை 6 மணியளவில் பெரிய சத்தத்துடன் ஏதோ வெடிக்க, இரண்டு வீடுகள் தரைமட்டமாகின. உடனடியாக அங்கு பல ஆம்புலன்ஸ்கள் விரைந்தன. இந்த சம்பவத்தில் மூவர் காயமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் உயிருக்கு ஆபத்தில்லை என கூறப்படுகிறது.

அந்த பகுதியில் வாழும் மக்கள் உடனடியாக தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள். வெடி விபத்துக்கான காரணம் இன்னமும் உறுதி செய்யப்படவில்லையென்றாலும், அப்பகுதியில் பல இடங்களில் எரிவாயு கசிவு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால், இந்த விபத்து அதன் காரணமாக நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

பலர் காயமடைந்திருக்கலாம் என்று எதிர்பார்த்து பல ஆம்புலன்ஸ்கள் அங்கு வரவழைக்கப்பட்டாலும், நல்ல வேளையாக பெரிய அளவில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

அந்த வெடிவிபத்து பெரிய விபத்து என அதிகாரிகளால் விமர்சிக்கப்பட்டாலும், வீடுகள் மட்டுமே சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us