பதுங்கியிருந்த தீவிரவாதிகள்…. அதிரடி வேட்டையில் பாதுகாப்பு படையினர்…. பாகிஸ்தானில் பரபரப்பு….!!

 

பாகிஸ்தானில் லோரலை மாவட்டத்தில் கோஹர் அணை என்னும் பகுதி அமைந்துள்ளது. அந்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அதற்கு பதிலாக பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இவ்வாறு இருவருக்கும் இடையே நடைபெற்ற கடுமையான துப்பாக்கிச் சூட்டில் 7 தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் மூன்று தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து தீவிரவாதிகளிடமிருந்து பெருமளவு வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது மாதிரியான தாக்குதல்கள் பலூசிஸ்தான் பகுதியில் கடந்த சில காலமாகவே அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Contact Us