கூட பிறந்த அக்காவை 20 வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த தம்பி

 

உடன்பிறந்த சகோதரியையே 20 வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. சென்னை மயிலாப்பூர் பகுதியில் இந்த கொடுமை அரங்கேறி வந்திருக்கிறது.  மயிலாப்பூரைச் சேர்ந்த அந்த 48 வயது பெண் கடந்த 20 வருடங்களுக்கு முன்பாக கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தாய் வீட்டிற்கு வந்து விட்டார். மயிலாப்பூரில் இருக்கும் தாய் வீட்டிலேயே 20 வருடங்களாக வசித்து வருகிறார்.

அப்பெண்ணின் இளைய சகோதரருக்கு 40 வயதாகிறது. அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆரம்பத்தில் சொந்த அக்காவிடமே பாலியல் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் தம்பி. பின்னர் பாலியல் வன்புணர்வு செய்து வந்திருக்கிறார். இத்தனை ஆண்டுகளும் இதை வெளியே சொன்னால் குடும்ப மானம் போய் விடும் என்று பொறுமையாக இருந்து வந்திருக்கிறார் அந்த சகோதரி.

40 வயதிற்கு மேல் ஆகியும் திருமணமாகாமல் இருக்கும் தம்பியின் தொல்லை அதிகரிக்கவே வேறுவழியின்றி தற்போது மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை செய்து அப்பெண்ணின் இளைய சகோதரனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் போலீஸார்.

கூட பிறந்த அக்காவை இத்தனை வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த தம்பியின் செயல் மயிலாப்பூர் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Contact Us