கல்லூரி மாணவி 6 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை- காதலன் கண் முன்னே நடந்த பயங்கரம்

 

கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் இருக்கும் அந்த தனியார் கல்லூரியில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் இளங்கலை பட்டம் படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலையில் அவரும் அவருடன் படிக்கும் காதலரும் காரில் மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்திற்கு சென்றிருக்கின்றனர்.

மலை அடிவாரத்தில் இருக்கும் லலிதா திரிபுர பகுதிக்கு சென்ற அவர்கள் காரை நிறுத்திவிட்டு ரெண்டு பேரும் நெடுநேரமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் காரில் வருவதையும், காரை நிறுத்திவிட்டு பேசிக் கொண்டிருப்பதையும் கவனித்துக் கொண்டிருந்த 6 பேர் திடீரென்று வந்து காதலனை சரமாரியாக அடித்து தாக்கி கீழே போட்டுவிட்டு மாணவியை தூக்கிக்கொண்டு புதருக்குள் சென்று விட்டனர்.

ஆறு பேரும் சேர்ந்து அந்த மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் படுகாயங்களுடன் முனகிக்கொண்டே கிடந்த காதலனிடம், இதைப்பற்றி வெளியே யாரிடமும் சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று சொல்லி மிரட்டி விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

பின்னர் மெல்ல எழுந்து காதலன் மாணவியை தூக்கி காரில் போட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். அங்கு நடந்த மருத்துவ சோதனையில் மாணவியை கூட்டு பலாத்காரம் செய்தது உறுதியாகி இருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேர் கொண்ட கும்பல் பிடிக்க சிசிடிவி கேமரா ஆய்வுகளின்படி தேடி வருகின்றனர்.

Contact Us