கங்கனா ரனாவத்தின் ‘தலைவி’… ரசிகர்களை கவரும் அழகிய பாடல் டீசர்…!!!

 

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.எல்.விஜய் தற்போது தலைவி படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பயோபிக் படமாகும்.

இந்த படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும், அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. விப்ரீ மோஷன் பிக்சர்ஸ் மற்றும் கர்மா மீடியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படம் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் தலைவி படத்தில் இடம் பெற்ற ‘உந்தன் கண்களில் என்னடியோ’ பாடலின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த அழகிய பாடல் ஆகஸ்ட் 30-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

வீடியோ பாடலை பார்வையிட

Contact Us