ரொறன்ரோவில் பெட்டிக்குள் சடலமாக மீட்கப்பட்ட இந்திய பெண்: அடையாளம் கண்ட பொலிசார்

 

ரொறன்ரோ நகரின் Silverthorne பகுதியில் கடந்த 25ம் திகதி பெட்டிக்குள் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.

Silverthorne பகுதியில் பெட்டிக்குள் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக பகல் 11.30 மணியளவில் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார் சடலத்தை மீட்டதுடன், உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் 41 வயதான Caledon பெண்மணி எனவும் இந்தியரான அவரது பெயர் Varsha Gajula எனவும் பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர். ரொறன்ரோவில் இந்த ஆண்டு கொல்லப்படும் 50வது நபர் Varsha Gajula என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Contact Us