ஜெயிலிலிருந்த கைதி -வாட்ஸ் அப்பில் கொடுக்கும் உத்தரவு -அடுத்து நடந்த விபரீத சம்பவங்கள்

 

டெல்லி திகார் சிறையில் தீபக் பைஜானியா என்ற கிரிமினல் குற்றவாளி பல்வேறு குற்ற வழக்கில் அடைக்கப்பட்டுள்ளார் .இவர் ஜெயிலிலிருந்த படியே வாட்ஸ்அப் மூலம் பல கொலை கொள்ளை போன்றவற்றை நடத்தி வருகிறார் .அதன்படி சமீபத்தில் சுதீப் தங்கட் (21) என்பவரை போலீசார் ஒரு குற்ற வழக்கில் பிடித்த போது அவர் தன்னை தீபக் இயக்குவதாக போலீசாரிடம் கூறினார். மேலும் தீபக் பைஜானியாவின் உத்தரவுப்படி அவர் சோனிபட்டில் இருந்து சுக்செயின் மற்றும் சச்சின் போன்றோருடன் இணைந்து இந்த கொள்ளைகளை செய்வதாக கூறினார்

சமீபத்தில் கஜூரி மேம்பாலம் அருகே அவர்கள் சென்ற காரை போலீசார் மறித்து , சுதீப், சுகா மற்றும் சச்சின் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவின் சிறப்பு புலனாய்வு பிரிவு (எஸ்ஐயு- II) வழிப்பறி கொள்ளை கும்பலை சேர்ந்த மூன்று பேரை வியாழக்கிழமை கைது செய்தனர். அப்போது அவர்கள் சிறையில் உள்ள குண்டர் கும்பல் தீபக் பைஜானியாவின் கட்டுப்பாட்டில் இருந்ததையும் கண்டறிந்தனர் . காவல்துறையினரின் கூற்றுப்படி, அவர்கள் கிழக்கு டெல்லியில் உள்ள டிரான்ஸ் யமுனா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளைக்கு திட்டமிட்டனர்.அப்போது போலீசார், அவர்களின் திட்டத்தை முறியடித்து அவர்களை பிடித்தனர் .

Contact Us