1,000 டாலர் கூட வங்கியில் இல்லை- பஞ்ச நாடான பங்களா தேஷிடன் 200 மில்லியன் கரன்ஸ்சி ஸ்வாப் வேறு …

இலங்கை மத்திய வங்கியின் கையிருப்பில் இனி எந்த அமெரிக்க டாலரும் இல்லை. இலங்கை கடந்த 7 வருடமான நம்பி இருந்த வெளிநாட்டவர்கள் வருகை, 95% சத விகிதத்தால் வீழ்ச்சி கண்ட நிலையில். இலங்கை ஏற்றுமதி செய்யும் தெயிலை மற்றும் ரப்பர் இலங்கைக்கு பெரிய அளவில் அன்னியச் செலவானியை(அமெரிக்க டாலர்களை) கொண்டுவரவில்லை. இன் நிலையில் பஞ்ச நாடான பங்களா தேஷிடம் 200 மில்லியன் டாலர்கள் கரன்ஸ்சி ஸ்வாப் செய்துள்ளது இலங்கை. அப்படி என்றால் என்ன தெரியுமா ? வாருங்கள் பார்கலாம்..

உலக சந்தையில் அமெரிக்க டாலரின், பிளக்கதை குறைக்கவும் இல்லாதொழிக்கவும் சீனா கொண்டுவந்துள்ள முறை தான் கரன்சி ஸ்வாப். இரு நாடுகள் போடும் ஒரு ஒப்பந்தம். பொதுவாக இதில் மத்தியஸ்தம் வகிப்பது சீனா தான். இலங்கை சில பொருட்களை, பங்களா தேஷுக்கு ஏற்றுமதி செய்யும். அதே போல பங்களா தேஷிடம் இருந்து இலங்கை சில பொருட்களை இறக்குமதியும் செய்யும். சுமார் 6 அல்லது 9 மாதத்திற்கு பின்னர், இரண்டையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, யார் கூடுதலாக இறக்குமதி செய்துள்ளார்கள் என்று பார்த்து. அதில் ஏற்றுமதி செய்ததை கழித்து மீதமுள்ள காசை அமெரிக்க டாலரில் செலுத்த வேண்டும். அது பெரும்பாலும் இலங்கையாக தான் இருக்கும். ஏன் என்றால் இலங்கை தான் பல பொருட்களை பங்களாதேஷிடம் இருந்து

இறக்குமதி செய்து இருக்கும். இதனை தான் கரன்சி ஸ்வாப் என்கிறார்கள். இதுவே தற்போது நடந்து முடிந்துள்ளது. நாயா பைசா அமெரிக்க டாலர் இல்லாமல் இலங்கை தற்போது திண்டாடி வரும் நிலையில். இலங்கையில் டயர் இறக்குமதி தொடக்கம் பச்ச மிழகாய், முதல் கொண்டு ஆப்பிள் போன் ஸ்கிரீன் என்று எதனையும் இறக்குமதிசெய்ய முடியவில்லை. இதனால் இலங்கையில் பொருளாதாரம் பல மடங்கு பின் நோக்கிச் சென்று வருவதோடு. போதாக் குறைக்கு கொரோனா தொற்று வேறு சிங்களப் பகுதிகளை தாக்க. தற்போது முதல் தடவையாக ஊர் அடங்கு என்றால் என்ன என்று சிங்களவர் அறிந்துகொண்டுள்ளார்கள் என்றால் மிகையாகாது.

Contact Us